ஒரு கோல் அடிக்க விடாத ஆஸ்திரேலியா! தோற்றாலும் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்!!

இரண்டு வாரமாக நடைபெற்ற காமன்வெல்த் போட்டியானது இன்றோடு நிறைவு பெறுகிறது. இதனால் இன்றைய தினம் ஹாக்கி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளின் இறுதி ஆட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு இன்றைய தினமும் தங்கம், வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் பேட்மிட்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அபாரமாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். இதனால் அவருக்கு பலரும் மீண்டும் பாராட்டுகளை தெரிவிக்கும் வண்ணம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் மற்றும் ஒரு இறுதி போட்டி இந்தியாவுக்கு கிடைத்ததாக தெரிகிறது. ஏனென்றால் இந்தியா இன்றைய தினம் ஆடவர் ஹாக்கி இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.

இதற்கு முன்பாக அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணிய இந்தியா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்தியா தோல்வியடைந்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதன்படி காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா தோல்வி பெற்று வெள்ளி பதக்கம் வென்றது. ஆஸ்திரேலியாலுக்கு எதிரான இந்த போட்டியில் ஏழுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.