இந்தியா – ஜப்பான் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து !!

உக்ரைன் மீது ரஷ்யா  நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அமைப்பின் அரசியல் அடிதளத்தை அசைத்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃப்யூயோ கிசிடா கூறியுள்ளார். இந்தியா- ஜப்பான் இடையேன 14- வது உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஃப்யூயோ கிசிடா பங்கேற்பதற்காக இந்தியா வந்தார்.

டெல்லி ஹைதரபாத் இல்லத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜப்பான் பிரதமர் ஃப்யூயோ கிசிடா தற்போது உலக அரசியல் நிலையினை ராணுவ வளத்தால் ஏற்க்க முடியாது என்றும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் சர்வதேச அமைப்பின் அரசியல் அடிதளத்தை அசைத்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை நேரடியாக குறிப்பிடாமல் தற்போதைய உகல நிகழ்வுகளால் புதிய சவால்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக இரு நாடுகளுக்கிடையே 6 நாடுகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகின. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கு ஜப்பான் முதலீடு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment