இலங்கைக்கு கை கொடுக்கும் இந்தியா.. ரூ.3,730 கோடி கடனுதவி வழங்க ஓகே சொல்லியாச்சு!
இலங்கை அரசு வெளிநாட்டுக் கடனாக 2,60,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் சுற்றுலாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஒரு படிக்கு போய் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது.
வெளிநாட்டுக் கடன்கள் ஒருபுறம் நெருக்க மறுபுறம் நிதிநிலையினைச் சமாளிக்க விலை உயர்வினை அமல்படுத்த பொதுமக்களும் கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமையைச் சமாளிக்க இந்த ஆண்டின் முதல் வாரம் இலங்கை அரசு இந்தியாவை அணுக ரூ.90 கோடி டாலர் அந்நிய செலாவணியை இந்திய அரசு கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொருட்டு வெளிநாடுகளிடம் மீண்டும் கடன்பெறத் திட்டமிட்டது.
அதன்படி இந்தியாவிடம் இருந்து இறக்குமதி பணிகளுக்கு மட்டும் சுமார் 7000 கோடி கடன் பெற திட்டமிட்டு இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசு சார்பில் ரூ.3,730 கோடி கடனுதவி வழங்க முடிவு எட்டப்பட்டுள்ளது.
