இந்தியாவில் இன்று 1 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று

இந்தியாவில் இன்று கொரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஓமிக்ரான் கொரோனா பரவல் மிக வேகமாகி வரும் நிலையில் இத்தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்தியாவில் நேற்று முன் தினம் இருந்த கொரோனா தொற்று 58000 என்ற அளவில் தான் இருந்தது.

பின்பு நேற்று கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியது.

இன்று அதில் இருந்து சற்று உயர்ந்து 1 லட்சத்து 17 ஆயிரமாக மாறியுள்ளது.

மிகவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், முக கவசம் , தனி மனித இடைவேளை, தடுப்பூசி போன்றவை எல்லாருக்கும் போடப்பட்டுள்ளதா என கண்காணிக்கப்படுகிறது.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 1 லட்சத்துக்கு மேல் போவது கடந்த 200 நாட்களுக்கு பிறகு இன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமும் தேசிய அளவில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment