Connect with us

பட்டினியின் பிடியில் இந்தியா!! ஒரே ஆண்டில் 94 லிருந்து 101க்கு சரிவு!!!

பட்டினி பிடியில் இந்தியா

News

பட்டினியின் பிடியில் இந்தியா!! ஒரே ஆண்டில் 94 லிருந்து 101க்கு சரிவு!!!

பட்டினியின் பிடியில் இந்தியா!! ஒரே ஆண்டில் 94 லிருந்து 101க்கு சரிவு!!!

தற்போது உலக நாடுகளில் பட்டினி நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது இந்தியாவானது பட்டினி நாடுகள் பட்டியலில் 101வது இடத்தினை பெற்றுள்ளது.

பட்டினிமேலும் பட்டினி நாடுகள் பட்டியலில் உள்ள 116 நாடுகளில் தற்போது இந்தியா 101வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது.மிகச்சிறிய நாடுகள் மட்டுமே இந்தியாவை விட பின் தங்கிய நிலையில் இருப்பதை இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் இதில் 92 வது இடத்திலும், நேபாளம் இதில் 76வது இடத்திலும் வங்கதேசம் இதில் 76வது இடத்திலும் உள்ளதால் இந்த நாடுகளை விட இந்தியாவில் தற்போது மோசமான நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

பட்டினிமேலும் பட்டினி நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியாவானது பட்டினி பிடியில் உள்ளதாக காணப்படுகிறது.

மேலும் இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே பட்டினி  மோசமாக உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 102வது இடத்தில் பப்புவா நியூகினியா என்ற நாடும் ,103வது இடத்தில் ஆப்கானிஸ்தான், நைஜீரியா நாடும், 105வது இடத்தில் காங்கோ ஆகிய நாடுகள் உள்ளன.

பட்டினிமேலும் பட்டினி நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் சோமாலியா உள்ளது. ஒரே ஆண்டில் வறுமையின் பிடிக்குள் கோடிக்கணக்கான இந்தியர்கள் தள்ளப்பட்டது இந்த ஆய்வறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

பட்டினி   மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது மிகவும் வேதனைக்குரியது. உணவு தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ள போதிலும் பட்டியலில் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

மேலும் அதோடு மட்டுமில்லாமல் இந்த பட்டினியை ஒழித்த முதல் பத்து நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

வறுமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட நாடுகள் பட்டினியை ஒழித்து பட்டியலில் முன்னேறியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களை ஆய்வு செய்து பட்டினி நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வேலை, வருமானம் இல்லாததால் நமக்கு வறுமை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் வறுமையின் பிடியில் 23 கோடி பேர் தள்ளப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top