மீராபாய்க்கு வெள்ளிக்கு பதில் தங்கமா? திடீர் திருப்பம்!

5f345caf67860df43d003268d3712ea2

ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வென்ற வீராங்கனை வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள நிலையில் அவருக்கு தற்போது தங்கபதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது என்பது சீனாவின் ஹோ சிஹூய் என்ற வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தங்கப்பதக்கம் வென்ற சீனாவின் ஹோ சிஹூய் என்பவர் தற்போது ஊக்க மருந்து சோதனைக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவரது தங்கப்பதக்கம் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது இதனால் மீராபாய் வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

சீனாவின் ஹோ சிஹூய் என்ற வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை முடிவு விரைவில் வெளியாகும் என்றும் அந்த முடிவு வெளிவந்தவுடன் ஒலிம்பிக் நிர்வாகிகள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே இந்தியாவின் மீராபாய்க்கு தங்கபதக்கம் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment