தங்கமா? வெள்ளியா? காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!!

காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா அணி வீரர்கள், வீராங்கனைகள் ஜொலித்துக் கொண்டு வருகின்றனர்.

இதனால் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. மேலும் இதுவரை இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஆறுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவை அனைத்தும் பழுதூக்குதல் போட்டியில் கிடைத்ததாக காணப்படுகிறது. இந்த நிலையில் மற்றுமொரு போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாக உள்ளது.

அதன்படி பந்து உருட்டுதல் போட்டியில் பதக்கத்தை  இந்தியா உறுதி செய்துள்ளது. இன்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 16க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி.

இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதி என்ற போதிலும் பலரின் எண்ணமும் தங்கம் கிடைக்க வேண்டும் என்று காணப்படுகிறது. இதனால் இந்திய மகளிர் அணி தாய் நாட்டிற்கு தங்கப்பதக்கத்தை வெல்வார்களா என்பது இறுதிப் போட்டியின் இறுதியில் தெரியலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.