Connect with us

உரம் வாங்குவதற்குக் கூட முடியாத இலங்கை! உதவிக்கரம் நீட்டிய இந்தியா!!

flag india sri lanka 260nw 1626250228 1

செய்திகள்

உரம் வாங்குவதற்குக் கூட முடியாத இலங்கை! உதவிக்கரம் நீட்டிய இந்தியா!!

உலக அளவில் பெரும் பொருளாதார வீழ்ச்சியில் இலங்கை காணப்படுகிறது. ஏனென்றால் அங்கு நாளுக்குநாள் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் இலங்கையின் பணமதிப்பு சரிந்து காணப்படுகிறது.

இதனால் இலங்கைக்கு உதவி செய்வதற்கு கூட பல நாடுகள் தயங்கும் நிலையில் காணப்படுகின்றன. இதன் மத்தியில் இந்திய அரசு நாள்தோறும் இலங்கைக்கு பல்வேறு விதமான கடன் உதவிகளையும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பியும், வழங்கியும் உதவிகளை செய்து கொண்டு வருகிறது.

அதன் வரிசையில் தற்போது இலங்கைக்கு இந்தியா ரூபாய் 427 கோடி கடன் மதிப்பினை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இலங்கைக்கு யூரியா உரம் வாங்குவதற்காக இந்தியா ரூபாய் 427 கோடி கடன் வழங்கி உள்ளதாக அந்நாட்டு தெரிவித்துள்ளது.

இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கி மூலமாக இலங்கைக்கு ரூபாய் 427 கோடி கடன் வழங்கப் படுவதாக இலங்கை அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்தும் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் அனுப்பப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top