Connect with us

ஆபத்தில் கை கொடுப்பான் தோழன்; அடுத்தடுத்து இலங்கைக்கு உதவும் இந்தியா!!

flag india sri lanka 260nw 1626250228 1

News

ஆபத்தில் கை கொடுப்பான் தோழன்; அடுத்தடுத்து இலங்கைக்கு உதவும் இந்தியா!!

ஆபத்தில் கை கொடுப்பான் தோழன்; அடுத்தடுத்து இலங்கைக்கு உதவும் இந்தியா!!

தற்போது இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இலங்கைக்கு உதவுவதற்கு பல நாடுகள் தயங்கி கொண்டு வருகிறது. இதன் மத்தியில் எத்தகைய தயக்கமுமின்றி இந்தியா முன்வந்து இலங்கைக்கு வரிசையாக உதவி கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக பெட்ரோல் டீசல் போன்ற வற்றை கடந்த சில நாட்களாக இலங்கைக்கு இந்தியா உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கைக்கு அத்தியாவசிய பொருளான அரிசியினை டன் கணக்கில் உதவி வழங்கி உள்ளதாக தெரிகிறது.

அதன்படி இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசி வழங்கியது இந்தியா. இந்தியா அனுப்பிய 11,000 டன் அரிசி ஏற்றி வந்த கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் தந்து இந்தியா உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை மக்கள் இந்தியாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top