Connect with us

மீண்டும் உதவிய இந்தியா!! ஆப்கான் மக்களுக்கு 2500 டன் கோதுமை!!

wheat

செய்திகள்

மீண்டும் உதவிய இந்தியா!! ஆப்கான் மக்களுக்கு 2500 டன் கோதுமை!!

இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக நாடுகளே அதிர்ச்சியடையும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றினார். அவர்கள் கைப்பற்றியது மட்டுமல்லாமல் அங்கு பெண்களுக்கு எதிரான வன்மையான சட்டங்களையும் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தாலிபான்கள் வரிசையாக சுட்டுக் கொலையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல நாடுகளும் வன்மையாக கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனால் அங்குள்ள மக்கள் பெரும் இன்னலில் உள்ளனர். மேலும் அங்கு உணவு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு மெல்ல மெல்ல அத்தியாவசிய தேவப் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்துக் கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நம் இந்தியா ஏற்கனவே மருத்துவ உபகரணங்களை அனுப்பி உதவியை செய்திருந்தது. இந்த நிலையில் உணவுப் பொருட்களை அனுப்பி உதவி செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. உணவு பற்றாக்குறையால் தவிக்கும் ஆப்கான் மக்களுக்கு மேலும் 2500 டன் கோதுமையை இந்திய அனுப்பி வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top