மீண்டும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா! மற்றுமொரு இமாலய சாதனை!! மோடி பெருமிதம்;

உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையை இந்தியா நிகழ்த்தி இருந்தது. ஏனென்றால் இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் உலகமே இவ்வளவு குறைவான நாட்களில் இந்தியா இத்தகைய சாதனையை புரிந்ததற்கு பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றுமொரு சாதனை குறித்து பெருமிதம் கொண்டுள்ளார். அதன்படி நம் நாட்டில் 150 கோடி டோஸ்களுக்கும் மேலாக தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். குறைந்த நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

இந்திய மக்கள் தொகையில் தகுதியுள்ள 90 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் புற்றுநோய் தொடக்கத்திலேயே கண்டறிவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்களை நாம் காத்திட முடியும் என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையத்தில் இரண்டாம் வளாகத்தை திறந்து வைத்தபின் பாரத பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment