பொருளாதார நெருக்கடியில் இலங்கை.!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!! இந்திய மதிப்பில் இத்தனை கோடியா?
இலங்கை நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. இதனால் அங்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 234 ஆக இலங்கையில் இருந்தது. இதனால் இலங்கையில் உள்ள மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் அங்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. இத்தகைய நெருக்கடியில் இலங்கை உள்ள நிலையில் இலங்கைக்கு உதவி பண்ண பல நாடுகள் முன்வந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இலங்கைக்கு இந்தியா ரூபாய் 7500 கோடி கடனுதவி வழங்கி உள்ளது. இலங்கைக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 7500 கோடி கடனுதவி வழங்க இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியா கடனுதவி அளித்துள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 3,750 கோடி கடனுதவி அளித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
