Connect with us

18 மாதங்களில் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி!! இந்தியா சாதனை;

covidd 1

செய்திகள்

18 மாதங்களில் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி!! இந்தியா சாதனை;

கடந்த ஆண்டு எந்த ஒரு நாடும் செய்யாத சாதனையை இந்தியா செய்து முடித்தது. அந்த சாதனை என்னவென்றால் கொரோனா தடுப்பூசி தான். ஏனென்றால் கடந்த ஆண்டு குறைந்த காலத்திலேயே 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசியினை செலுத்தி இந்தியா சாதனை புரிந்தது.

முதலில் சீனா இந்த சாதனை பிரிந்த நிலையில் அதற்கடுத்து இந்தியா செய்தது. இதனால் பல நாடுகளும் இந்தியாவினை  திரும்பிப் பார்த்தனர். மேலும் நம் தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வாராவாரம் கொரோன தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்றைய தினத்தோடு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா மற்றும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெறும் 18 மாதங்களிலேயே 200 கோடி தடுப்பூசிகளை செலுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை வரை 199.97 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இன்று 200 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை இந்தியா கடந்தது. இந்த 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததற்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top