இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் மூன்றாவது அலையாக ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாடெங்கும் இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மத்திய சுகாதார இணை அமைச்சருக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் வேகமாக இது பரவி வருகிறது. தினசரி பாதிப்பு கடந்த வாரத்தை விட இது வேகமாக பரவி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி லாக் டவுன் பொங்கலுக்கு பின் போடப்படும் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இன்று மாலை கூடி வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி என்று ஆலோசனை நடத்துகின்றார்.
இன்று மாலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.