Connect with us

இந்தியா உண்மையான நண்பனாக நடந்துகொள்கிறது: அமெரிக்கா பாராட்டு

News

இந்தியா உண்மையான நண்பனாக நடந்துகொள்கிறது: அமெரிக்கா பாராட்டு

93f79d700f21fb7ac486aac0f3803df5

சமீபத்தில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது என இந்தியாவிற்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது 

இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்த பாராட்டை அமெரிக்கா தெரிவித்துள்ளது

058ec39df6aed30f87842ffd61f0f9e4

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைச்சரவை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பல லட்சம் தடுப்பூசிகள் இலவசமாக மாலத்தீவுகள் பூடான் வங்கதேசம் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது 

இது இந்தியா உண்மையான நண்பனாக அண்டை நாடுகளிடம் நடந்து கொள்வதை வெளிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக ரீதியாகவும் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்திய அனுப்பி வைத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top