இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியுள்ளது.

india vs australia1 பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் 177 ரன்களில் ஆட்டம் இழந்தது. லாபிசாஞ்சே மட்டும் ஓரளவு நிலைத்து ஆடை 49 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட்டுக்களையும் அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதனை அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அபார ஆட்டம் காரணமாக 400 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடிய 84 ரன்கள் எடுத்தார்.

india vs australiaஇந்த நிலையில் 223 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை பேட்டிங் செய்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அஸ்வின் அபார பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் ஆட்டம் இழந்தது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் ஷமி தலா இரண்டு விக்கெட் களையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரை பொருத்தவரை இந்திய மண்ணில் இந்தியா இன்னும் கிங் தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இன்னிங்ஸ், வெற்றி,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews