இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்

மனிதனாய் பிறந்த எல்லோருக்குமே ஏதோவொரு தருணத்தில் குடி, புகை, திருட்டு, காமம், குரோதம், பொய் மாதிரியான தீய எண்ணங்கள் தலை தூக்கும். பலர் அந்த எண்ணங்களின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, அடிமனதில் அந்த தீய எண்ணங்களை புதைத்து விடுவர். ஒரு சிலரோ அந்த வித்தை கைவராமல் கொலை, கொள்லை, கற்பழிப்புகளில் ஈடுபட்டு வாழ்க்கையை இழக்கின்றனர். அதுமாதிரி நமது வாழ்வில் நேராமல் இருக்க, தீய எண்ணங்களை நமது மனதில் தோன்றாமல் இருக்க கீழ்க்காணும் சிவ மந்திரத்தினை சொல்லி நல்ல குடிமக்களாக வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பெயர் பெற்று தருவோம்..

மந்திரம்…

ஓம்கார நமசிவாய! ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா ”

இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் உள்ளங்கையில் கண்விழித்து, சிவனை மனதில் நினைத்து பதினோரு முறை உச்சரித்துவிட்டு படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டும். பிறகு குளித்து முடித்து வழக்கம்போல் பூஜை செய்யலாம்.. இப்படி செய்வதால், ஈசன் அருள் கிட்டும், எதிலும் வெற்றி கிட்டும். துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது. காமம், குரோதம், பொய், களவு, பேராசை, ஆணவம் மாதிரியான கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. தோன்றினாலும் தீய வழியில் செல்லாமல் இம்மந்திரம் தடுக்கும். தினந்தோறும் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் பிரதோஷ காலத்திலாவது பதினோரு முறை உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். மந்திரத்தை உச்சரிக்கும்போது பிழையில்லாமல் உச்சரிப்பது அவசியம்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.