இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் இந்த மந்திரத்தினை சொல்லித்தான் கிளம்பி, வெற்றிகரமாக சீதாதேவியை கண்டுபிடித்து வந்தாராம். அதனால் எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்க இந்த மந்திரத்தினை சொல்லி அனுமனை வழிபட கைமேல் பலன் கிடைக்கும்.

”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

இந்த மந்திரத்தினை சொல்லி அனுமனை வழிபட்டு வந்தால் எடுத்த காரியம் ஜெயமாகும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். ஒன்றாய் இருக்கும் தம்பதியினருக்கிடையில் பிணக்குகள் நீங்கி ஒற்றுமையாய் இருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.