தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்! ஆளும் கட்சியையே வீழ்த்திய சுயேச்சை வேட்பாளர்!!
தமிழகத்தில் இன்று ஒட்டுமொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவிக்காக இந்த மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
பல இடங்களில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமே பதவிகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக 21 மேயர் பதவிகளை திமுக கூட்டணியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சில இடங்களில் கூட்டணி வேட்பாளர்களை வீழ்த்தி திமுகவின் அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுகவையே ஒரு சுயேச்சை வேட்பாளர் வீழ்த்தியுள்ளது தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் சத்தியசீலன் 15 வாக்கு பெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் 18 வாக்குகள் பெற்றார். இதனால் அவர் குமாரபாளையம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளார்.
