டெல்லியை தொடர்ந்து ஹரியானாவிலும் கட்டுப்படுத்த முடியாத காற்று மாசு; 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!!

நம் இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலககள், என அனைத்திற்கும் காலவரையற்ற  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசு

 

மே அவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றவும், ஆன்லைன் கிளாஸ்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் காற்று மாசு, பனியோடு சேர்த்து புகைமண்டலம் போல காணப்படுகிறது.

இவை டெல்லி மாநிலத்தோடு மட்டுமில்லாமல் ஹரியானாவிலும் காணப்படுகிறது. இதனால் ஹரியானா மாநில அரசு அங்குள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் முழுமையாக காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருகிராம், பரிதாபாத்,சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment