காங்கிரசுக்கு அதிகரிக்கும் ஆதரவு! மற்றுமொரு கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இன்னும் சில நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கானது ஆதரவு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று கூறலாம்.

ஏனென்றால் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு அந்த பகுதியில் மக்களின் ஆதரவு இருந்து கொண்டே காணப்படுகிறது. அதே வேலையில் காங்கிரஸ் கட்சிக்கு உலகநாயகன் கமலஹாசனும் ஆதரவளிப்பார் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இன்றைய தினம் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தமிழ்நாட்டுக்கு முன்னேற்ற வேண்டும் என்பதுதான் முதல் வேலை என்று கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும் கமலை நேரில் சந்தித்து ஆதரவு கூறினோம் என்றும் அவர் நிச்சயமாய் எனக்கு ஆதரவளிப்பார் என்றும் அதற்காக நம்பிக்கை இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

மேலும் அவர் சந்திப்பில் கன்னியாகுமரி எம்பியும், நடிகருமான விஜய் வசந்த் உடன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மற்றும் ஒரு கட்சி காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோவை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கூறிய நிலையில் இன்று அவர் பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.