
தமிழகம்
தமிழகத்திற்கு தொந்தரவு தரும் முயற்சியா? கனமழையின் போது காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு..!!
கடைசிலனா நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டு வந்தன.
இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள நீர் பாசனங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டு வருகிறது. மேலும் நேற்றைய தினம் 9 அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாகவும் நீர்வளத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் திடீரென்று ஆந்திரா அரசு தமிழகத்திற்கு காவிரி நீர்யினை அதிகளவு திறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தமிழக எல்லையான பிழி குண்டுலுவில் காவிரி வரத்தானது 24,000 கன அடியாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் திடீரென்று 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேலும் நீர் பாசன அணைகள் நிரம்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக நேற்றைய தினம் மேட்டூர் அணை பகுதியில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இன்னும் சில நாட்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆந்திரா மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களுக்கு இந்த முறை நீர் திறப்பினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
