#Alert தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?… அனைத்து மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் தயார் நிலையில் இருக்கும் படி அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரனோ நோய் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் , மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரனோ வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும்
அனைத்து மருத்துவமனைகளிலும் கொரனோ வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள் , மருத்துவ உபகரணங்கள் , ஆக்சிஜன் வசதிகள் , மருத்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது இரவு நேர ஊரடங்கு போன்ற ஏதாவது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
