
செய்திகள்
கனமழை மத்தியில் கர்நாடகா அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!!
கடந்த மூன்று நாட்களாகவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு அதிகளவு காவிரி நீரை திறந்து விட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் ஐம்பதாயிரம் கன அடி அளவு காவிரி நீர் கர்நாடகா எல்லைப் பகுதியான பிழி குண்டுலுவிலிருந்து திறந்து விட்டது.
எனவே தமிழகத்தில் உள்ள காவேரி ஆற்று கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கர்நாடகா அரசு அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பை சற்று அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 44 ஆயிரத்து 879 கனஅடியில் இருந்து 87 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
கே.ஆர். எஸ் அணையில் 72 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது .கபினி அணையில் 15 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
