
செய்திகள்
எகிறும் கொரோனா பலி; பீதியில் பொதுமக்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வந்த நிலையில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் குறைய தொடங்கியது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்பானது மீண்டும் எகிற தொடங்கியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே தற்போது கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,216 பேர் என்றும் நாட்டில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,83,793 ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளது. அதோடு 23 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக கூறியுள்ளது.
தற்போது கொரோனா பாதித்தவர்களில் 8,148 பேர் இருப்பதாகவும் மொத்தம் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 4,26,90,845 ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளது. இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 98.64% ஆக உயர்ந்து இருப்பதாகவும் உயிரிழந்தவர்கள் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளது.
மேலும், இதுவரையில் 1,96,00,42,768 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பதாகவும், நேற்று மட்டும் 14,99,824 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளது.
