
தமிழகம்
தேர்தலுக்கு முன்பைவிட தற்போது மக்களிடையே செல்வாக்கு அதிகரிப்பு..!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது முதல் அதிக அளவில் பேசப்பட்டு வருவது திராவிட மாடல்தான்.
இது குறித்து பல இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் திராவிடமாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் பரவி விட்டது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன்படி சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு உரையாற்றினார். திமுக ஆட்சி ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
மேலும் திமுக ஆட்சியில் அரசின் நிதிநிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் பணவீக்கம் குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மக்களிடையே திமுகவுக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
