
தமிழகம்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்!!: முதல்வர்
கடந்த இரண்டு நாட்களாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விதமான செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்திக் கொண்டு வருகிறார். இதில் புதிய யுத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன்படி மக்களுக்கு பயனளிக்கும் என்றால் எந்த வித புதிய யுத்திகளையும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். பல்வேறு துறை செயலாளர்கள் உடனான இரண்டாம் நாள் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
புதிய தொழில் தொடங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அதை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் நான் முதல்வன் திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒப்பந்தங்களை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். புதிய தொழில் தொடங்க அரசு அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
வேளாண் துறையில் உலக சந்தைகள் அதிகரித்து புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் தமிழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவகையில் ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசின் திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு ஒதுக்கீட்டில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஊரக வீட்டுவசதி திட்டம், குடிநீர் வசதி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை விரைந்து செயல் படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
