News
கரும்பு விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்! உணவுக் கொள்கை மாற்றம்;
தற்போது நம் இந்தியாவில் எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில் என்னும் அளவிற்கு கனிம கரிம வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆயினும் அவர்கள் தேவையின்றி பயன்படுத்துவதால் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் அவற்றின் தேவையும் படிப்படியாக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவானது தேவைகளுக்காக பல்வேறு எண்ணெய் கிணறுகள் கொண்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் போன்றவற்றை கொள்முதல் செய்து விடுகின்றன. இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையானது அதிகரித்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் சில தினங்களாக பெட்ரோல் இணையானது 100 ரூபாயை தொட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதன் மத்தியில் தற்போது அரசானது உணவு கொள்கையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. மேலும் அதன்படி 2025ல் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்தல் அதற்காக உணவுகொள்கை அரசு தற்போது மாற்றி அமைத்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்து கரும்பு விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. தற்போது பெட்ரோலில் 8.5 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்படும் நிலையில் உள்ளதுஅவை 2025ல் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. மேலும் இலக்கை எட்ட எத்தனால் தயாரிக்க வழங்கும் கழிவு சர்க்கரை ,அரிசி அளவை படிப்படியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது கூறப்படுகிறது.
