Connect with us

தூய்மைபணியாளர்களுக்கு நலத்தொகை அதிகரிப்பு! ஆதி திராவிடர் நலத்துறையின் அதிரடி

welfare worker

செய்திகள்

தூய்மைபணியாளர்களுக்கு நலத்தொகை அதிகரிப்பு! ஆதி திராவிடர் நலத்துறையின் அதிரடி

தூய்மைபணியாளர்களுக்கு நலத்தொகை அதிகரிப்பு! ஆதி திராவிடர் நலத்துறையின் அதிரடி

பொதுவாக ஊர் முழுக்க கொரோனா பரவி இருந்தாலும் எவ்வித முகச்சுழிப்பும் இல்லாமல் தூய்மைப்பணியில் ஈடுபடுபவர்கள் தூய்மைப்பணியாளர்கள்தான்.

இவர்கள் இல்லை என்றால் ஊரே துர்நாற்றம் வீசி விடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எப்போதும் கொடுக்கப்படும் பல்வேறு திட்டங்களின் உதவித் தொகையை சற்று அதிகரித்துள்ளது  ஆதிதிராவிடர் நலத் துறை . அதன்படி 100 சதவீதமாக இவர்களுக்கு உயர்த்தி உதவி தொகை வழங்கப்படுகிறது

வாரிய உறுப்பினர்கள் பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.5 லட்சம்வழங்கப்படும். கை, கால் அல்லது கண்களை இழந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

உடல் நலம் பாதிக்கப்பட்டு முழுவதும் இயங்க முடியாமல் இருப்போருக்கு  ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

முதியோர் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது இறுதிச் சடங்குக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது, இயற்கை மரணத்துக்கு ரூ.20 ஆயிரமாக  அதிகரிக்கப்பட்டுள்ளது

அதேபோல, உறுப்பினர்களின் பெண் குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது

ஆண் குழந்தைகளின் திருமணத்துக்கு ரூ.3 ஆயிரமும் உயர்த்தப்பட்டு உள்ளது. 7 பிரிவுகளில் உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இவையெல்லாம் தூய்மைப்பணியாளர் நல வாரியத்தில் முறையாக பதிவு செய்தோருக்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top