சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தலில் வேட்பாளருக்கான செலவு தொகை உயர்வு!

ஒரு மாநிலத்தில் தேர்தல் என்றாலே அங்கு உள்ள பெருநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அனைத்திலும் மும்முரமாக பணிகள் நடைபெறும். அதோடு மட்டுமில்லாமல் வாகனங்களின் வரத்தும் போக்கும் அதிகமாகவே காணப்படும். கூடவே வேட்பாளர்களின் எண்ணிக்கையும் ஆங்காங்கே கூட்டமாக காணப்படும். போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றால் தொண்டர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது.

இவையெல்லாம் நாம் தேர்தல் களத்தில் காண்பதுதான். ஆனால் பலருக்கும் தெரியாது என்னவென்றால் தேர்தல் நடைபெற்றால் அதில் ஏற்படும் செலவு தொகை தான். இந்த நிலையில் வேட்பாளருக்கான தேர்தல் செலவு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளருக்கான செலவு தொகையின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு செலவு தொகை ரூபாய் 70 லட்சத்திலிருந்து ரூபாய் 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே வேளையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு செலவு தொகை ரூபாய் 28 இலட்சத்தில் இருந்து ரூபாய் 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இத்தகைய செலவு உச்சவரம்பை மாற்றியமைத்தது சட்ட அமைச்சகம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment