Connect with us

கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: கலெக்டர் உத்தரவு!

Tamil Nadu

கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: கலெக்டர் உத்தரவு!

28044a1ad3ffc4ac61e66e03294bc0c7

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் மட்டும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 200ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கோவையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அந்த கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

* அனைத்து உணவகங்கள், அடுமனைகள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. 

* பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை. 

* பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை. 

* சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி. 

* உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகளுடன் இயங்க அனுமதி. 

* பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை.

* அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் நாளை முதல் அதாவது செப். 17 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top