
தமிழகம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!
நம் தமிழகத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை காணப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை சமீப காலமாக நிலவியது.
மேலும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனமும் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் நடைபாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3237 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1130 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டதால் நடைபாண்டில் 3237 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2207 முதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்வு நடந்தது கணினி வழியில் நடந்த தேர்வுக்கு ஜூலை 5ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பு தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
