Connect with us

மக்கள் மகிழ்ச்சி; தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு.!!

Krishna 1

தமிழகம்

மக்கள் மகிழ்ச்சி; தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு.!!

கடந்த சில வாரங்களாக நம் தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அங்கு ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதன் மத்தியில் கர்நாடகா அரசு திடீரென்று காவேரி நீரினை அதிகளவு தமிழகத்திற்கு திறந்து விட்டது. இதனால் காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் அங்கும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு இருந்த நிலையில் தற்போது தான் தமிழகத்திற்கு எச்சரிக்கை குறைந்துள்ளது.

ஏனென்றால் காவேரி நீர் வரத்தும் குறைந்தது, மேலும் மேட்டூர் அணை மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இவ்வாறு இருந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர்வரத்து திடீரென்று தமிழகத்திற்கு அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை 0 பாயிண்ட் கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 92 கனஅடியில் இருந்து 95 கனஅடியாக அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top