Connect with us

தமிழகத்தை நோக்கி கிளம்பிய கிருஷ்ணா நதி!! சென்னையில் குடிநீர் பற்றாக்குறை கிடையாது?

krishna water

தமிழகம்

தமிழகத்தை நோக்கி கிளம்பிய கிருஷ்ணா நதி!! சென்னையில் குடிநீர் பற்றாக்குறை கிடையாது?

இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த நீர்வரத்து ஆனது தமிழகத்திற்கு கடந்த மூன்று நாட்களில் குறைந்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று மீண்டும் தமிழகத்திற்கு வரும் நீர் வரதானது சற்று அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது.

அதன் முதற்கட்டமாக மேட்டூர் அணைக்கு இன்று ஒரே நாளில் பத்தாயிரம் கன அடி நீர் அதிகரித்து 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் புழல் ஏரியும் வேகமாக நிரம்பிக் கொண்டு வருகிறது.

எனவே சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்பது தெரிகிறது. இந்த நிலையில் தற்போது கிருஷ்ணா நதி நீரும் தமிழகத்திற்கு அதிகளவு வந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதன்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து 90 கன அடியில் இருந்து 95 கன அடியாக அதிகரித்து வருகிறது. கண்டளாறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top