Connect with us

ஒருபுறம் கனமழை! மறுபுறம் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு!! கரையோர மக்களுக்கு நிலை?

காவிரி

தமிழகம்

ஒருபுறம் கனமழை! மறுபுறம் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு!! கரையோர மக்களுக்கு நிலை?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் அதிக கன மழை வரை பெய்தது.

இதன் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தற்போது வரையும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா அரசு நாள்தோறும் தமிழகத்திற்கு காவிரி குடிநீர் திறப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினமும் காவிரி நீர்வரத்து சற்று அதிக அளவு தமிழகத்திற்கு வந்துள்ளது. அதன்படி தமிழக எல்லையான கிளி குண்டுளுவில் காவிரி நீர்வரத்து  1.50 லட்சத்திலிருந்து 1.60 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் ஆற்று கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top