தவறான ஆபரேஷன்! அழுகிய இடது கை… கேரளாவில் சோகம்!!

கேரளாவில் தவறான அறுவை சிகிச்சையால் பள்ளி மாணவரின் கை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தளச்சேரியை சேர்ந்த சுல்தான் என்ற மாணவன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியுள்ளார். அப்போது இடது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனை தளச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, எழும்பு மருத்துவர் இல்லாததால் பணியில் இருந்த மருத்துவர் கட்டுப்போட்டுள்ளார்.

பின்னர் மறுநாள் வந்த எழும்பு மருத்துவர் மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து கைவலி இருந்ததால் 2 வாரத்திற்கு பிறகு கோழிகோடு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிர்ச்சி!! திருமணமான ஆறே மாதம்.. இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

அங்கு பரிசோதனை செய்ததில் ரத்த ஓட்டம் இல்லாததால் கை அழுகிவிட்டதாக முழங்கை பகுதி வரையில் எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.

அதன் படி, தனியார் மருத்துவ மனையில் கை அகற்றப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.