Connect with us

மூன்றாவது நாளாக தோல் காலணி தொழிற்சாலைகளில் ஐடி ரெய்டு!!

IT Raid

தமிழகம்

மூன்றாவது நாளாக தோல் காலணி தொழிற்சாலைகளில் ஐடி ரெய்டு!!

கடந்த இரண்டு நாட்களாக காலனி தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை என சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இன்றைய தினமும் தொடர்வதாக தகவல் கிடைத்தது.

அதன்படி ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட தோல் காலணி ஆலைகளில் மூன்றாவது நாளாக ஐடி சோதனை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் வருவான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேஎச் குழுமம் மற்றும் பரிதா குழுமத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஆயிரம் விளக்கு, செந்நீர் குப்பம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள கேஎச் குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை பெரியமேடு, பெரியண்ணா மேஸ்திரி தெருவில் உள்ள பரிதா காலனி தொழிற்சாலையில் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top