Connect with us

நகைக்கடைகளுக்கு ஒரு ரெய்டு! கடலூர் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையினர் சோதனை;

வருமான ஒழிப்புத்துறை

செய்திகள்

நகைக்கடைகளுக்கு ஒரு ரெய்டு! கடலூர் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையினர் சோதனை;

நகைக்கடைகளுக்கு ஒரு ரெய்டு! கடலூர் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையினர் சோதனை;

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு பின்பு அதிக அளவு வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

அதன்பின்னர் பல தொழிலதிபர்களின் இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று நகைக்கடையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுகிறது.

அதன்படி கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள வள்ளி விலாஸ் மற்றும் சிவ வள்ளி விலாஸ்  நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. தொடர்ச்சியாக சிதம்பரத்தில் வள்ளி விலாஸ், விருத்தாச்சலத்தில் ஜெயின் ஜுவல்லரி, புதுச்சேரியில் ராம் தங்க மாளிகையில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top