மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் வீட்டில் வருமான வரி சோதனை!

நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் விஜய்யின் உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ  வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம் ஜியோமி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மொபைல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி-இறக்குமதி கையாளுவதில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனங்கள் ஈடுபடுவதால் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இவர் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆவார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராவார். ஏற்கனவே ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். நடிகர் விஜயின் தேவா, செந்தூரப்பாண்டி போன்ற திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக பணியாற்றினார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment