இந்தியா,பிரிட்டன் உட்பட 42 நாடுகளில் AY4.2! தமிழ்நாட்டில் AY4.2 இல்லை!

சில நாட்களுக்கு முன்பு கண்ணுக்கே தெரியாத வைரஸ் கிருமியினால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியானது கொரோனாவை இந்தியா கட்டுப்படுத்தியது.  உலக சுகாதார துறை அமைப்பு

இருப்பினும் சில நாட்களாக இந்தியாவில் இந்த கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறிருக்கையில் தற்போது உருமாறும் புதிய கொரோனா இந்தியாவில் தென்பட்டதாக உலக சுகாதார துறை அமைப்பு தகவல் அளித்துள்ளது.

இந்த புதிய உருமாறும் தன்மையுள்ள கொரோனாவுக்கு AY4.2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவை டெல்டா வகையை விட 15% வேகமாக பரவும் தன்மை உடையதாகவும் காணப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்தியா, பிரிட்டன் உள்பட 42 நாடுகளில் இந்த நோயின் பரவல் கண்டறியப்பட்டதாக கூறபடுகிறது. இந்த AY4.2 நோயின் பரவல் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி இந்தியாவில் 17 பேருக்கு இந்த AY4.2 கொரோனா நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் 7 பேருக்கு இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் 4 பேருக்கு இந்த AY4.2 கொரோனா நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. தெலுங்கானா, கர்நாடகாவில் இரண்டு பேருக்கு AY4.2 கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீரின் தலா ஒருவருக்கு இந்த AY4.2 கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது.இதனால் தமிழ்நாட்டில் இந்த AY4.2 கொரோனா நோய் பரவல் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment