Sports
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளருக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இதற்கான பயிற்சி போட்டியில் கலந்து கொள்வதற்காக மூன்று வாரங்களுக்கு முன்னரே ஐபிஎல் அணிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றனர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் துபாய் சென்றுள்ள நிலையில் அங்கு அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளரும் ஒருவர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 13 பேருக்கு கொரோனா என்பதால் ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது
