அறநிலையத் துறை பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 1000/- லிருந்து 3000/-ஆக உயர்த்தி வழங்கும் திட்டம்!: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்;

நம் தமிழகத்தில் நாள்தோறும் புதுப்புது திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அவை மக்களுக்கு மிகவும் புரோஜனம் அமைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஊக்கத்தொகை திட்டங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் வரிசையில் அறநிலையத்துறை பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இவை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டுள்ளார். அர்ச்சகர், ஓதுவார் இசை கற்போர் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருக்கோவில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் அர்ச்சகர், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போருக்கு மாத ஊக்கத் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் அறநிலையத் துறை சார்ந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment