Entertainment
பிரச்சினைகளுக்கு நடுவே தலைவரான மதுமிதா!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறது, மற்ற சீசன்களைவிட இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இந்த முறை பங்கேற்றுள்ளது சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.
கடந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்தார், அவர் உள்நுழைந்ததே சரிந்த டிஆர்பியை ஈடுகட்டவே என்பது அவர் வந்த முதல்நாளே தெரிந்தது.

அவர் முதன் முதலாக கையில் எடுத்தது அபிராமி- முகினின் நட்பினைத் தான்; அடுத்ததாக கவினின் முக்கோண காதலை எடுப்பார் என்று இருந்தவர்களுக்கு சற்று திகைப்பான விஷயம் தர்சனின் கதைதான்.
பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணாதிக்கம் உள்ளதாக மதுமிதாவிடம் கூற, அது பெரும் பிரச்சினை ஆனது. வனிதா விரித்த வலையில் மாட்டிக் கொண்டது மதுமிதாதான்.
கடந்தவாரம் முழுமையும் இந்தப் பிரச்சினையிலாயே வாரம் சென்றது, தற்போது சாண்டியின் தலைவர் பதவி முடிய, இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடந்தது. இதில் ஷெரின், மதுமிதா, முகின் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மதுமிதா புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
