இன்ப துன்பங்களை பொறுமையோடு எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கும் யுகாதி பண்டிகை…

7a7f2e34c7ae54c39b7378472779b5d8

தமிழ், ஆங்கில புத்தாண்டுகள் போல தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு யுகாதி ஆகும். இதை உகாதி பண்டிகை எனவும் சொல்வர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

பொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில்  கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

240e5a325c86574b53ea79c88d861aea

சைத்ர மாதத்தின் முதல்நாளில்தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்

1d61aa95846c2f45c3ddb056002ccc98

உகாதியன்று அறுசுவைகள் சேர்ந்த பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

7135e64731667537966a9126d3e25739-2

உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது. திருமலையில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று உற்சவ மூர்த்திகளை தங்க வாசல் அருகில் எழுந்தருளச் செய்து ஆஸ்தானம், பஞ்சாங்கம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறும். 

உகாதி பண்டிகையான இன்று கீழ்கண்ட சுலோகம் சொல்லி வெல்லம் கலந்த வேப்பம்பூ பச்சிடியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டும், இதனால் வைரம் போன்ற உடலும், அனைத்து நலன்களும் கிட்டும்.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச

சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம் ||

அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை வாழ்த்துகள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...