மிரட்டும் மாண்டஸ் புயல்! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்?

தமிழகத்தில் நாளைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடி தூள்!! டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி..!!

அதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சோகம்!! 55 அடிக்குள் ஊசலாடும் உயிர்.. மீட்கும் பணி தீவிரம்!!

இதனை தொடர்ந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.