எந்தெந்த மாவட்டங்களில் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மழை நீருக்குள் மூழ்கியுள்ளது. அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்க கடலில் உருவானது.

கனமழை

இதனால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், வட, தென் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்த விடுமுறை நாளைய தினமும் தொடர்ச்சியாக விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளையதினம் கனமழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளி கல்லூரிகள் திறந்து முதல் தமிழகத்தில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment