அடுத்த 3 மணி நேரத்தில்… எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் தென்காசி, திருநேல்வேலி, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.