Connect with us

தமிழகமே அதிர்ச்சி!! விருதுநகரில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி!!

death

தமிழகம்

தமிழகமே அதிர்ச்சி!! விருதுநகரில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சப்பரத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சப்பரம் எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே சப்பரம் வரும்பொழுது இடதுபக்கமாக திருப்பியதாக தெரிகிறது. பின்னர் வலது பக்கமாக சப்பரத்தை திருப்பும் போது பிளக்ஸ் பேனர் மூலம் இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது பேனரை பிடித்துக்கொண்டிருந்த 5 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top