மூன்று நாட்களில் ஒமைக்ரான் இருமடங்கு பாதிப்பு! நெதர்லாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

கடந்த சில வாரங்களாக உலகிலுள்ள பல நாடுகளும் மிகுந்த கட்டுப்பாடோடு காணப்படுகிறது. ஏனென்றால் அதிவேகத்தில் வீரியம் மிக்கதாக பரவிவரும் ஒமைக்ரான் உலகிற்கே அச்சத்தைக் கொடுக்கின்றது.

ஒமைக்ரான்  முதலில் தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது. தற்போது உலக சுகாதார அமைப்பு இது குறித்து அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளது. அதன்படி மூன்று நாட்களில் ஒமைக்ரான்  பாதிப்பு இருமடங்கு வேகத்தில் பரவி வருவதாக கூறியுள்ளது.

தற்போது வரை எண்பத்தி ஒன்பது நாடுகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு பரவி உள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலையில் நெதர்லாந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான்  வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது என்றும் பிரதமர் மார்க் ரூட்டே. இதனால் ஜனவரி 14-ஆம் தேதி வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடை, உணவகம், பார், அருங்காட்சியம் பள்ளி மற்றும் திரையரங்கு மூடப்பட வேண்டும் என்றும் மார்க் ரூட்டே கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment