Connect with us

அடுத்த படத்துல நீங்க தான் ஹீரோயின்… டாக்டர் பட நடிகைக்கு உறுதியளித்த இயக்குனர்….!

பிரியங்கா

பொழுதுபோக்கு

அடுத்த படத்துல நீங்க தான் ஹீரோயின்… டாக்டர் பட நடிகைக்கு உறுதியளித்த இயக்குனர்….!

அடுத்த படத்துல நீங்க தான் ஹீரோயின்… டாக்டர் பட நடிகைக்கு உறுதியளித்த இயக்குனர்….!

ஒரு படம் வெற்றி பெற அந்த படத்தின் கதை மற்றும் ஹீரோ எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஹீரோயினும் முக்கியம். அழகு என்பதை தாண்டி ஹீரோயின் என்பவர் படத்தில் முக்கியமான கேரக்டர் என்பதால் அவரின் நடிப்பும் அழகான முகபாவனைகளும் நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்களை அந்த படத்தை ரசிப்பார்கள்.

அந்த வகையில் கடந்தாண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா மோகன். டாக்டர் படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றதென்றால் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். இவரின் துறுதுறு நடிப்பும், க்யூட் ரியாக்சன்களும் தான் படத்தின் ஹைலைட்.

இதன் காரணமாகவே அந்த படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான டான் படத்திலும் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகனையே நாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதுமட்டும் இன்றி டாப் நடிகரின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் பிரியங்கா தற்போது தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு நிலையான இடத்தை பிடித்து விட்டார். மேலும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இவரை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் நெல்சன் தனது அடுத்த படத்திலும் இவருக்கு வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளாராம்.

தற்போது தளபதி விஜய் தான் உருவாகி வரும் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம். இந்நிலையில் அந்த படத்தில் தான் பிரியங்கா மோகனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக நெல்சன் உறுதி அளித்துள்ளாராம். நீங்க நடத்துங்க நெல்சன்……

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top